Tuesday, 21 June 2011

சம்ஜெளதா குண்டுவெடிப்பு: அசீமானந்த் உள்ளிட்ட ஐவர் மீது குற்றப்பத்திரிகை!

Muthupet PFI -- 20-June-2011

கடந்த நான்கரை ஆண்டு கால விசாரணைக்குப் பின், சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் இந்துத்துவா சாமியாரான அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.



2007ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.



சிபிஐ மற்றும் என்ஐஏ என நான்கரை ஆண்டுகள் நீடித்த இந்த குண்டு வழக்கின் விசாரணைக்குப் பின், சுவாமி அசீமானந்த், சுனில் ஜோஷி, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திர கலசங்கரா ஆகியோருக்கு எதிராக பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அபிநவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக உள்ள அசீமானந்த் ஹைதராபாதில் மக்கா மசூதி குண்டுவெடிப்பு தொடர்பாக 2010 நவம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார். ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment