Tuesday 14 June 2011

வெளிநாட்டு தொழிலாளர்களை கட்டுப்படுத்த சௌதி அரசு முடிவு

உள்நாட்டுத் தொழிலாளர்களின் வேலைவாய்பினை அதிகரிக்கும் வகையில் செளதி அரேபியா அரசு முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது.


உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு


வெளிநாடுகளில் இருந்து சௌதி அரேபியாவிற்கு தேவையான தொழிலாளர்களை தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் சௌதி அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான உத்தரவினை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சௌதியில் வந்து பணிபுரியும் தொழிலாளர்களின் திறனைப் பொறுத்து பணி நிர்யணம் செய்யப்படுகிறது. இதற்காக ‘நிடாகாட்’ என்ற திட்டத்தை வகுத்துள்ளது. உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் சௌதியில் உள்ள நிறுவனங்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எக்ஸலண்ட், பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதனடிப்படையில் தொழிலாளர் நல அமைச்சகம் விசா மற்றும் பணிக்கான ஆர்டர்களை வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விசா வழங்க கட்டுப்பாடு

எக்ஸலன்ட் மற்றும் பச்சையின் கீழ் வரும் நிறுவனங்கள் சௌதி அல்லாதவர்களுக்கு விசா வழங்க அனுமதித்துள்ளது. மேலும் மஞ்சள் நிறத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் 9 மாதம் விசாவும், சிகப்பு நிறத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் 6 மாத விசாவும் வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு வழங்கலாம் என அனுமதித்துள்ளது. சௌதி அரேபியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவே அந்நாட்டு அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு சௌதி அரேபியாவின் மக்கள் தொகை 27 மில்லியன் ஆக இருந்தது. இதில் 30 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர். இதில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மில்லியன் தொழிலாளர்கள் கடந்த ஆண்டு இறுதியில் சௌதி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சௌதி அரசின் புதிய திட்டத்தினால் இந்தியத் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.




No comments:

Post a Comment