Tuesday, 14 June 2011

சமச்சீர் கல்வி வழ‌க்கு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இன்று விசாரணை

சமச்சீர் கல்வி தொடர்பான த‌மிழக அர‌சி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இ‌ன்று ‌விசாரணைக்கு வரு‌கிறது.

தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்றும் கூறி சமச்சீர் கல்வித் திட்டத்தை அ.இ.அ.‌தி.மு.க. அரசு ‌நிறு‌த்‌தி வை‌த்தது.



இதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் எதிர் காலம் சிறப்பாக அமைய அனைவருக்கும் தரமான சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அந்த சட்ட திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் இந்த சட்ட திருத்ததை எதிர்த்து சென்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

சமச்சீர் பாடப் புத்தகங்களில் உள்ள வேண்டாத பகுதிகளை நீக்கவோ, புதிதாக பாடப்பகுதிகளை சேர்க்கவோ நடவடிக்கை எடுக்கலாம் என்றும், அதுவரை சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடரலாம் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி இக்பால் உத்தரவிட்டு இருந்தார்.

இ‌ந்த‌ ‌நிலை‌யி‌ல் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உ‌ச்ச ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மே‌ல்முறை‌யீ‌‌ட்டு மனுவை படித்துப் பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். அ‌த‌ன்படி இ‌ந்த வழ‌க்கு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வரு‌கிறது.

No comments:

Post a Comment