Thursday, 21 July 2011

நில ஒதுக்கீட்டில் முறைகேடு: நிதிஷ் குமார் ஆட்சிக்கு சிக்கல் எதிர்ப்பு அலை ஓங்குகிறது

பீகாரில், அமைச்சர்களின் உறவினர்கள் சிலருக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து, முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.


பீகார் மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரின் குடும்பங்களுக்கு நிலம் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
பீகார் கல்வி அமைச்சரின் மகள், பீகார் பாசனத் துறை முதன்மைச் செயலாளரின் மகள், ஐக்கிய ஜனதா தள எம்.பி ஜகதீஷ் சர்மாவின் மகன், பாஜக எம்எல்சி அசோக் அகர்வாலின் மகன் ஆகியோருக்கு இந்த நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பீகார் சட்டசபையில் இன்று இப்பிரச்சனையை எழுப்பிய எதிர்கட்சிகள், முறைகேடாக நிலம் ஒதுக்கப்பட்டதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment