Thursday 21 July 2011

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்கள் விடுதலை ஆகிறார்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள ஷார்ஜா நகரில் வேலை பார்த்த மஸ்ரிகான் என்ற பாகிஸ்தான் நாட்டுக்காரரை அவருடன் வசித்த 17 இந்தியர்கள் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை செய்தனர். கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக அவர் கொலை செய்யப்படடார். 


இதனால் அந்த 17 பேரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர்களுக்கு மரணதண்டனை விதித்தது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கானின் குடும்பத்துக்கு ரத்தப்பணமாக (நஷ்ட ஈடாக) ரூ.8 கோடி கொடுக்க 17 பேரும் சம்மதித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் விடுதலை ஆகிறார்கள்.



ரத்தப்பணம் கொடுக்கும் தகவலை குற்றவாளிகள் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதை கோர்ட்டு ஏற்றுக் கொண்டு வருகிற 27-ந் தேதி அவர்களுக்கு மன்னிப்பு வழங்க இருக்கிறது.

No comments:

Post a Comment