Thursday 21 July 2011

சீனாவில் 2 துணை மேயர்களுக்கு மரண தண்டனை

பெய்ஜிங் : சீனாவில் லஞ்ச ஊழலில் சிக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று 2 அதிகாரிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.


ஹா  நகர துணை மேயராக இருந்தவர் ஸமியாங். பதவியில் இருந்தபோது அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தவறான முறையில் நிலங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலை அதிபர்களுக்கு வழங்கினார்.

அதற்காக, அவர்களிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகவும், ரூ.250 கோடி கையாடல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதே போன்று சுசோ நகரில் துணைமேயராக இருந்தவர் ஜியாங் ரெஞ்சி. இவரும் இதேபோன்று ரூ.60 கோடி லஞ்சம் பெற்ற தாக புகார் கூறப்பட்டது.

இவர்கள் மீது சுப்ரீம் மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நேற்று தூக்கிலிடப்பட்டனர்.

கடந்த ஆண்டு லஞ்சம் வாங்கியதாக போலீஸ் தலைமை அதிகாரி வென் குயாங்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment