Thursday, 21 July 2011

பருப்பு கொள்முதலில் ரூ.700 கோடி ஊழல் : ஒடிசா ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

கட்டாக் : ஒடிசாவில் சத்துணவு திட்டத்துக்காக பருப்பு கொள்முதல் செய்ததில், நடந்த ஊழல் குறித்து மாநில ஊழல் கண்காணிப்பு இயக்குனரகம், ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


ஒடிசாவில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் மற்றும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்துக்காக, பருப்பு கொள்முதல் செய்ததில், 700 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த குற்றச்சாட்டின் பேரில், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிரமிளா மல்லிக் ராஜினாமா செய்தார்.


இந்த ஊழல் குறித்து, மாநில ஊழல் கண்காணிப்பு இயக்குனரகம் விசாரணை நடத்தி, ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் அறிக்கை சமர்பித்துள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பாலாசூர், ஜாஜ்பூர், கஞ்ஜம், மயூர்பஞ்ச், தேவ்கார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 34 பேர் கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

மட்டரகமான, புழுக்கள் நிறைந்த பருப்புகளை, கொள்முதல் செய்ததன் மூலம் அரசு அதிகாரிகள், 20 கோடி ரூபாய் வரை லாபம் பெற்றுள்ளதாக ஊழல் கண்காணிப்பு இயக்குனரகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment