Thursday 21 July 2011

இஷ்ரத் ஜஹான்:எஸ்.ஐ.டிக்கு நான்காவது தலைவராக ராஜீவ் ரஞ்சன் வர்மா நியமனம்

அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் உள்பட நான்குபேர் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு(எஸ்.ஐ.டி) நான்காவது தலைவராக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் ஒரே வருடத்தில் நான்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் ஐ.பி.எஸ் கேடரைச் சார்ந்த ஜெ.வி.ராமுடு தனது உடல்நிலையை காரணம் காண்பித்து பதவியை ஏற்கமறுத்துவிட்டார்.நியமனம் செய்யும் முன்பு தன்னை கலந்தாலோசிக்கவில்லை என ராமுடு நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. ராமுடுவின் பெயரை முன்மொழிந்தது குறித்து அடுத்த மாதம் நான்காம் தேதிக்கு முன்பு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என உள்துறை செயலாளர், துணைச் செயலாளர் ஆகியோரிடம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நியமனத்திற்கு ராமுடுவின் கருத்தை ஆராய்ந்ததாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரின் கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தும் குஜராத் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள சிறப்பு புலனாய்வுக்குழுவின் முன்னாள் தலைவர்களான கர்னைல் சிங், சத்யபால் சிங் ஆகியோர் வாபஸ் பெற்ற சூழலில் ராமுடு நியமிக்கப்பட்டார்.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடியை கொலைச்செய்ய திட்டமிட்டார்கள் என பொய் குற்றம் சாட்டி இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானே, ஸீஷான் ஜோஹர் ஆகியோரை 2004-ஆம் ஆண்டு குஜராத் போலீஸ் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது.

No comments:

Post a Comment