புதுடெல்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான
விசாரணையின் போது போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்த ஃபயாஸ் உஸ்மானியின்
மரணத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும்,
என
சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சம்பவத்தில் குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை
வழங்கவேண்டும் என குண்டு வெடிப்புகளை கண்டித்த எஸ்.டி.பி.ஐயின் தேசிய
தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குண்டுவெடிப்புகளை
நடத்தியவர்கள் குறித்த தெளிவான ஆதாரங்கள் கிடைக்கும் வரை புலனாய்வு
ஏஜன்சிகளும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் ஊகங்களை பரப்புரைச்செய்வதை
நிறுத்தவேண்டும்.
மலேகான், மக்கா மஸ்ஜித்,
அஜ்மீர்தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு குண்டுவெடிப்புகளில்
சங்க்பரிவார அமைப்புகளின் பங்கு தெளிவானபிறகும் புலனாய்வு அதிகாரிகள்
முஸ்லிம் சமுதாயத்தின் மீது சந்தேகங்களை எழுப்புகின்றனர் என இ.அபூபக்கர்
குறிப்பிட்டார்.
பல வருடங்களாக சிறையில் வாடும்
முஸ்லிம்களையும் அவர்களின் உறவினர்களையும் புதிய குண்டுவெடிப்பு வழக்குடன்
தொடர்புபடுத்தி விசாரணை செய்வது கேலிக்குரியது என அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment