சட்டீஸ்கரில் மாவோஜிஸ்டுக்களின் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 8 காங்கிரஸ் தொண்டர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேரணி முடிவடைந்து ராய்ப்பூருக்கு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்த போது தண்டவடா மாவாட்டத்தில் இண்டாகோன் - உதாந்தி இடையேயான பாதையில் அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மாவோயிஸ்டுக்களின் கண்ணிவெடி தாக்குதலில் அகப்பட்டது.
மாவோஜிஸ்டுக்கள் அதே நேரத்தில் துப்பாக்கிச்சூடும் நடத்தியதால், 8 காங்கிரஸ் தொண்டர்கள் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு காவற்துறையினர் குவிக்கப்பட்டு மாவோஜிஸ்டுக்கள் தேடப்பட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கந்கார் மாவட்டத்தில், இரண்டு பராமிலிட்டரி இராணுவத்தினர் மாவோயிஸ்டுக்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த வருடம் தண்டவாடாவில் மாவோயிஸ்டுக்கள் நடத்திய தாக்குதலில் 74 காவற்தூறையினர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கடந்த மாதத்தில் மாத்திரம், மாவோயிஸ்டுக்கள் நடத்திய அடுத்தடுத்த கண்ணி வெடித்தாக்குதல்களில் 30க்கு அதிகமான காவற்துறையினர் படுகொலை செய்யப்பட்டனர்.
2009 ம் ஆண்டிலிருந்து மாவோயிஸ்டுக்களை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டதுடன், மத்திய அரசினால் ஆபரேஷன் கிரீண் ஹண்ட் என இதற்கு பெயரிடப்பட்டது. மேற்கு வங்கம், ஜார்ஜ் கண்ட், பீஹார், ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் 50,000 ற்கு மேற்பட்ட துணை இராணுவத்தினர் இத்தாக்குதல் நடவடிக்கைக்காக இயங்கிவருகின்றனர்.
No comments:
Post a Comment