Thursday 21 July 2011

எகிப்தில் மூன்று கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடத்த முடிவு

எகிப்து நாட்டில் மூன்று கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதாக அந்நாட்டு ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பார்வையாள்களுக்கும் அனுமதியளித்துள்ளது. மத்திய கிழக்கு நாடான எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு(83) எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.


17 நாட்கள் நடந்த போராட்டத்திற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது இடைக்கால அரசும், ராணுவமும் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் பாராளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் செப்டம்பர் மாதம் 18ம் தேதி ‌நடக்கலாம் என தெரிகிறது. இப்பாராளுமன்ற தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் மமாதுக் ஷாஹீன் கூறுகையில்,"நாடு முழுவதும் 120 மாவட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலை ராணுவமே முன்னின்று நடத்தினாலும், நீதித்துறை தான் கண்காணிக்கிறது. இதற்‌காக சிறப்பு நீதிபதி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்" என்றார்.

மேலும் எகிப்தில் முக்கிய அரசியல் கட்சிக்கு நிகரான அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவம் என்ற அமைப்பும் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. அதே போன்று பதவி நீக்கம் செய்யப்பட்ட முபாரக்கின் தேசிய ஜனநாயக கட்சியும் போட்டியிடுகிறது.

No comments:

Post a Comment