Thursday 21 July 2011

உஸ்பெகிஸ்தான் - கிரிகிஸ்தான் இடையில் நிலநடுக்கம் - இதுவரை 13 பேர் பலி

மத்திய ஆசியாவின் உஸ்பெகிஸ்தான் - கிர்கிஸ்த்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லை பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 13 பேர் பலியாகியிருப்பது உறுதியாகியுள்ளது.


பெர்கேனா நகருக்கு அருகில் 6.1 ரிக்டர் அளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பர்கானா வேலியின் புராதன கட்டிடங்கள் பல இடிந்து வீழ்ந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். 86 க்கு அதிகமானோர் காயமடைந்தனர். சுமார் மூன்று நிமிடமளவுக்கு இந்நிலநடுக்கம் நீடித்துள்ளது.

இந் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அச்சத்தினால் மக்கள் இரவு நேரம் முழுவதும் தெருக்களிலே விழித்திருந்துள்ளனர். நாம் எதிர்பார்த்ததை விட நிலநடுக்கத்தினால் கொஞ்சம் அதிகமாகவே தாக்கம் உணரப்பட்டதாக உஸ்பெகிஸ்த்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ் தெரிவித்தார்.

கடந்த 2008 ம் ஆண்டில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 70 பேர் பலியாகியிருந்தனர்.

No comments:

Post a Comment