Thursday 21 July 2011

கச்சா எண்ணெய் உற்பத்தி : முதலிடத்த்தில் வெனிசுலா

லண்டன் : கச்சா எண்ணெய் உற்பத்தியில் இந்தாண்டு முதல் இடத்தினை வெனிசுலா பெற்றிருப்பதாக, கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் என்ற ஓபெக் அமைப்பு தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஓபெக் எனும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், வெனிசுலா, எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஈரான், ஈராக், அல்ஜீரியா, கத்தார்,நைஜீரியா, குவைத், லிபியா, இந்தோனேஷியா என மொத்தம் 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இந்நிலையில் ஓபெக் அமைப்பின் வருடாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இதில் 2002-2011-ம் ஆண்டிற்கு எண்ணெய் உற்பத்தி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில் லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா இந்தாண்டு நாள் ஒன்றுக்கு 296.05 பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

இது கடந்த 2009-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 211.02 பில்லியன் பேரல்கள் தான் உற்பத்தி செய்தது. இது 12.01 சதவீதம் ஆகும். ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் பின்தங்கியுள்ளன.

No comments:

Post a Comment