பெங்களுரூ: கர்நாடாக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா, அவரது அமைச்சர்கள்
ஆகியோர் சட்டவிரோத சுரங்க மோசடியில் ஈடுபட்டதுடன், மிகப்பெரிய அளவில்
சுரங்க ஊழல் நடந்திருப்பதை அம்மாநில லோக் ஆயுக்தா அம்பலப்படுத்தியுள்ளது.
இவர்களைத்தவிர மாஜி முதல்வரும் , மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான குமாரசாமியும், தனது ஆட்சியின் போது பல்வேறு சுரங்க நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, ரூ.பல கோடியை வாரி சுருட்டியிருப்பதையும், லோக் ஆயுக்தா பட்டியலிட்டுள்ளது. எனினும் , முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினர், மாஜி முதல்வர் குமாரசாமி குடும்பத்தினர் , சுரங்க மோசடிகள் குறித்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், சில மீடியாக்களிடம் இந்த விஷயங்கள் கசிந்துள்ளன. அதன் விபரங்கள் வருமாறு:
முதல்வர் எடியூரப்பா, சிமோகா மாவட்டத்தில் உள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு சுரங்க நிறுவனத்திடமிருந்து ரூ. பல கோடியை தனது அறக்கட்டளைக்கு நன்கொடையாக பெற்றுள்ளார். இவரது மகன் ரேவண்ணா எம்.பி, மற்றொரு மகன் விஜயேந்திரா, மருமகன் ஷோகன்குமார் ஆகியோர், பெங்களுரூ சர்வதேச விமான நிலையம் அருகே ராய்ச்சினாஹள்ளியில் சுமார் 1 ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் சுரங்க நிறுவனத்திற்கு விற்பனை செய்து ரூ. 20 கோடி கமிஷன் பெற்றுள்ளனர்.
எடியூரப்பா குடும்பத்தினர் பிரேரானா எனும் பெயரில் அறக்கட்டளை துவக்கியுள்ளனர். இவர்கள் 4 சட்டவிரோத சுரங்க நிறுவனங்களிடமிருந்து தலா ரூ. 10 கோடி வரை நன்கொடை பெற்றுள்ளனர்.
மேலும் எடியூரப்பா அமைச்சரவையில் உள்ள 4 முக்கிய அமைச்சர்களும் சுரங்க மோசடியில் சிக்கியுள்ளனர்.அவர்களில் ஏற்கனவே, சுரங்க தொழிலில் ஈடுபட்டு்ள்ள, கருணாகர ரெட்டி, ஜனார்த்தனரெட்டி, ஆகியோரும், சோமன்னா, ஸ்ரீராமலு ஆகிய இரு அமைச்சர்களுக்கும் சுரங்க மோசடியில் பங்குள்ளது.
இவர்களை தவிர பா.ஜ. எம்.பி. ஆனந்த் சிங் என்பவரும் , சுரங்க மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் கடந்த 14 மாதங்களில் நடந்த ஆய்வில் முதல்வர் எடியூரப்பா ஆட்சியில் சுரங்க மோசடியினால் அரசுக்கு ரூ 1827 கோடி , வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் லோக் ஆயுக்தாவின் அறிக்கை கூறுகிறது.
மேற்கண்ட ஆட்சியாளர்களைத்தவிர மாஜி முதல்வரான குமாரசாமியும்,தனது ஆட்சியின் போது சுரங்க நிறுவனங்களிடமிருந்து கோடி கோடியாக கொள்ளையடித்துள்ளதையும், லோக் ஆயுக்தா பட்டியலிட்டுள்ளது. சித்ரதுர்கா மாவட்டத்தில் 2 சுரங்க நிறுவனங்களுக்கு ஆதரவாக இவர் செயல்பட்டு அதற்கு கமிஷனாக கோடி கணக்கில் ஆதாயம் அடைந்துள்ளார்.
மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் எப்படியோ மீடியாக்கள் மூலம் கர்நாடகாவில் வெட்டவெளிச்சமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தும்கூர், பெல்லாரி போன்ற மாவட்டங்களில் நடந்து வரும் சட்டவிரோத சுரங்கங்களினால் அரசியல்வாதிகள் மட்டுமின்றி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதையும் அந்த அறிக்கை காட்டுகிறது.
மேற்கண்ட சுரங்க மோசடிகள் குறி்த்து லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறுகையில், இந்த விபரங்கள் எப்படி மீடியாக்களிடம் கசிந்தது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் இதில் சம்பந்தப்படிருக்கமாட்டார்கள் என்றார்.
மொத்தம் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கை கர்நாடக மீடியாக்கள் வாயிலாக வெளியானதால், கர்நாடாக அரசியலில் பெரும் பிரளயம் ஏற்படும் என்பது உறுதி.

No comments:
Post a Comment