Thursday 21 July 2011

சோமாலிய நாட்டில் கடும் வறட்சி நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக வறட்சி நிலவுகிறது. குறிப்பாக சோமாலியாவில் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் சோமாலியா மக்கள் உயிர் பிழைக்க கென்யா, எத்தியோப்பியா அகதிகள் முகாம்களுக்கு வருகிறார்கள்.


சமீப வாரங்களாக எத்தியோப்பியா முகாமில் பல ஆயிரம் சோமாலியர்கள் புகலிடம் தேடி வந்துள்ளனர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதி முகாமை பொதுசுகாதார பிரிவு தலைவர் பால் ஸ்பைகல் கூறுகையில்,"டோலோ அடோ முகாம் நிலைமை மோசமாக உள்ளது" என்றார்.

ஜுன் மாதத்தில் 10 ஆயிரம் பேருக்கு 7.4 பேர் என ஒரு நாளைக்கு மரணம் அடைவதாக ஐ.நா முகமை தெரிவித்து உள்ளது. அடிப்படைக் கோட்டுக்கு 15 மடங்கு அதிகம் மரணம் ஏற்படுகிறது.

குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

No comments:

Post a Comment