Monday 4 July 2011

கருப்புப் பண விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது சுப்ரீம் கோர்ட்

டெல்லி: கருப்புப் பண விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்கள் 26 பேர்களின் கறுப்புப் பணம் பற்றிய விவரத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்றத்தில் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஆஜராகிய அரசு வக்கீல், "சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போரின் பெயர் விவரத்தையும், எவ்வளவு தொகை? என்பதையும் வெளியிட முடியாது. இது இந்தியா-சுவிஸ் நாடுகள் இடையே ஏற்கனவே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தத்துக்கு எதிரானது'' என்று வாதிட்டார்.

இந்த நிலையில் உச்சநீதி மன்றத்துக்கு கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கோடை கால விடுமுறைக்கு பின், உச்சநீதிமன்றம் இன்று செயல்பட தொடங்கியது. அப்போது முக்கிய வழக்காக இந்த கருப்புப் பண விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன் ரெட்டி செயல்பவடுவார் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

தனி புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டிருப்பது மத்திய அரசுக்குக் கிடைத்த பெரும் தோல்வியாக கருதப்படுகிறது. மேலும் இந்த விசாரணைக் குழுவின் மூலம் கருப்புப் பண விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment