Monday, 4 July 2011

பெயரை மாற்றினால் அதிஷ்டம் அடிக்கும்!மூன்று வருடங்களில் ஒரு லட்சம் பேர் பெயரை மாற்ற மனு!!


தமிழ்நாட்டில் அதிர்ஷ்டத்துக்காக பெயரை மாற்றும் ஆர்வம்
பெயரை மாற்றினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.

 பள்ளிச் சான்றிதழ்களில் மனித தவறுகளால் ஏற்பட்ட பிழைகளை திருத்தி, சரியான பெயரை பதிவு செய்து கொள்ள எழுது பொருள் மற்றும் அச்சகத்துறை இயக்குனரகத்துக்கு விண்ணப்பம் செய்பவர்கள் உள்ளனர்.
 
அதே சமயம், பெயரை மாற்றிக் கொண்டால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற மூட  நம்பிக்கையில் புதிய பெயரை வைத்துக் கொள்ளவோ அல்லது பெயரில் உள்ள எழுத்துக்களை மாற்றி அமைக்கவோ விண்ணப்பம் செய்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர். 
அந்த வகையில் பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.   பெயரை மாற்றவோ அல்லது பெயரில் திருத்தம் செய்யவோ விரும்புபவர்கள், தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சடிப்பு இயக்குனரகத்துக்கு விண்ணப் பிக்க வேண்டும்.
 
விண்ணப்பதார்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு பெயரில் திருத்தம், அல்லது பெயர் மாற்றம் செய்து, இயக்குனரகம் அறிவிக்கும். இந்த அறிவிப்பு இயக்குனரகத்தின் கெஜட்டில் வெளியாகும். அதில், விண்ணப்பதாரரின் பழைய பெயரும், புதிய பெரும் இடம் பெறும். பெயர் திருத்தம் மற்றும் அல்லது பெயர் மாற்றம் கோரி, இந்த இயக்குனரகத்துக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பெயர் மாற்றம் கோரி இந்த இயக்குனரகத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதற்கு கட்டணமாக ரூ.4.5 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.  
 
கடந்த 2008, ஏப்ரல் 1-ம் தேதி முதல், 2009 மார்ச் 31-ம் தேதி வரை இந்த இயக்குனரகம் 29 ஆயிரத்து 730 விண்ணப்பங்களை பெற்றது. இதன் மூலம் ரூ.1.28 கோடி வருமானம் கிடைத்தது. கடந்த 2009 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2010 மார்ச் 31-ம் தேதி வரை 32 ஆயிரத்து 963 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றின் மூலம் ரூ.1.32 கோடி வருமானம் வந்துள்ளது. கடந்த 2010 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடப்பு 2011 மார்ச் 31-ம் தேதி வரை, பெயர் மாற்றங்கள் செய்யப்பட்ட வகையில் அரசுக்கு ரூ.1.98 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.  
  
என்று ஒழியும் இந்த மூ ட நம்பிக்கைகள்? 

No comments:

Post a Comment