Saturday 4 June 2011

அதிபர் மாளிகை மீது குண்டு வீசித் தாக்குதல்


ஏமன் அதிபர் மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அலி அப்துல்லா சலேத் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலை அதிபர் ஆதரவு படையினருக்கும் பழங்குடியினர் அமைப்பைச் சேர்ந்த குழுவினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் அதிபர் மாளிகை மீது திடீரென குண்டுகள் வீசப்பட்டன.


இதில் அலி அப்துல்லா சலேத் உயிரிழந்து விட்டதாக எதிர்க்கட்சியினரால் நடத்தப்படும் தொலைக்காட்சி ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டது.


ஆனால் இத்தகவலை அந்நாட்டின் தகவல்துறை இணையமைச்சர் அப்துல் ஜனாதி மறுத்துள்ளார். "குண்டுவீச்சு தாக்குதலில் சில அதிகாரிகள் மட்டுமே லேசாக காயமடைந்துள்ளனர். அதிபர் அலி அப்துல்லா சலேத் நலமாக உள்ளார். இன்னும் சில மணி நேரங்களில் அவர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுவார்" என்று தெரிவித்தார்.


எனினும் குண்டுவீச்சில் அதிபர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏமனில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக உள்ள அலி அப்துல்லா சலேத் ஆட்சியில் பெரிய முன்னேற்றம் இல்லை என்று கூறி ஜனவரி மாதம் முதல் அங்கு பழங்குடியினர் அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment