லிபியா அதிபர் கடாபி பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தி அந்த நாட்டு பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை கடாபி ராணுவம் ஒடுக்கி வருகிறது. இதனால் அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது போர் தொடுத்துள்ளன.
தினமும் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று இரவு அமெரிக்க கூட்டுப்படை விமானங்கள் திரிபோலி நகரில் அடுத்தடுத்து குண்டு வீசி தாக்கின. ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
12 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலில் 40 பொதுமக்கள் பலியாகி இருப்பதாக லிபியா அரசு அறிவித்துள்ளது. அதிபர் கடாபியின் மாளிகை அருகேயும் ஏவுகணை விழுந்தது. இதில் கடாபிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டதா என்ற விவரமும் தெரியவில்லை.
இதற்கிடையே பென்காசி நகரில் எதிர்ப்பு படையினருக்கும், லிபியா ராணுவத்துக்கும் கடும் சண்டை நடந்தது. இதில் எதிர்ப்பு படையினர் தரப்பில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர்.
No comments:
Post a Comment