Saturday 4 June 2011

எச்.ஐ.வி பாதிப்பு: இந்தியாவுக்கு பத்தாவது இடம்

வளரும் தலைமுறையினரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் தினமும் எய்ட்ஸ் நோய்க்கு தாக்குதலுக்கு உள்ளாவதாக ஐ.நா சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரில் பெண்கள் சுமார் 46 ஆயிரமும், ஆண்களில் சுமார் 49 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இளம் தலைமுறையினர் எய்ட்ஸ் பாதிப்பில் தென் ஆப்ரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் பெண்களும், 82 ஆயிரம் ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து நைஜீரியாவில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பெண்களும், ஒரு லட்சம் ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கென்யா நாடு இடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் 60 சதவீதம் வரை வளரும் இளம் பெண்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தாலும் தென்னாப்ரிகாவில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இந்தவகை நோய் பரவுவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் குறிப்பாக குடும்ப சூழ்நிலை, சமுதாய பழக்க வழக்கம், அரசியல் சூழ்நிலை போன்றவை முக்கிய காரணியாக கூறப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டில் 15-24 வயதினரில் சுமார் 41 சதவீதத்தினர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 15 வயது கொண்டவர்களே அதிகமாகும்.

இவ்விடயத்தில் இந்தியா 10வது இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும் மற்றும் சமுதாய பழக்க வழக்கம், அரசியல் எதிர்ப்பு போன்ற சூழ்நிலைகளை தாண்டி பாலியல் கல்வி சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment