இ.கோலி பக்டீரியாவுக்கு 17வது நபர் ஜேர்மனியில் பலியாகி உள்ளார். பயங்கர நச்சுப்பொருளுடன் புதிய வகை பக்டீரியாவாக இ.கோலி பக்டீரியா உருவாகி உள்ளது.
இந்த நுண் பக்டீரியாவானது புதிய மரபணு மாற்றத்துடன் உருவாகியுள்ளது. இதில் மனிதர்களை கொல்லும் ஜூன்கள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் இருந்து ஜெர்மெனி போன்ற நாடுகளுக்கு வெள்ளரிக்காய் உள்பட காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த வெள்ளரிக்காயை சாப்பிட்டதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவான இ.கோலி பரவி உள்ளது என ஜேர்மனி முதலில் குறிப்பிட்டது.
இந்த கருத்துக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜேர்மனி அறிவிப்பால் தங்கள் விவசாயம் செய்த உணவு வகைகளை ஏற்றுமதி செய்யமுடியாமல் போனது. எனவே எங்கள் இழப்புக்கு உரிய நிவாரணம் தரவேண்டும் என ஸ்பெயின் கூறியது.
இ.கோலி பக்டீரியா உயிரைக் கொல்லும் மரபணுக்களுடன் அமைந்துள்ளது. இந்த இ.கோலி நுண் உப பக்டீரியாவின் திடீர் மரபணு மாற்றம் காரணமாக ஏற்பட்டு உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இகோலி பக்டீரியாவிற்கு பலியான 17வது நபராக ஹம்பர்க் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார். ஐரோப்பிய நாடுகளில் இ.கோலி பக்டீரியாவிற்கு இதுவரை 1500 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பக்டீரியா வேகமாக பரவி வருவதால் பாதிப்பு வேகம் அதிகரித்து உள்ளது.
No comments:
Post a Comment