Friday 3 June 2011

ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு நாடகம்:அதிகரித்து வரும் எதிர்ப்பு


மும்பை/டெல்லி:ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குருவும், ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடிகளை சம்பாதித்துள்ள பாபா ராம் தேவ் நடத்தவிருக்கும் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரத நாடகத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராம் தேவின் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் அரசியல் நாடகம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் எஸ்.ராமச்சந்திர பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஊழலையும், கறுப்புப்பணத்தையும் தடுப்பதற்கான நிவாரணத்தை நிச்சயிக்க சன்னியாசிகளுக்கு சாதிக்குமானால் அரசிற்கு தேவையில்லை. ஊழலில் மானம் கெட்டு பயந்துபோன மத்திய அரசு ராம்தேவிற்கு பின்னால் செல்கிறது.

பொது சொத்துக்களை தனியார்மயமாக்கும் நவீன தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கைகளை ஆதரிப்பவர்கள்தாம் அன்னா ஹஸாரேவும், ராம் தேவும் ஆவர். ஆதலால் அவர்களின் அணுகுமுறை பலன் தராது என ராமச்சந்திர பிள்ளை மேலும் தெரிவித்தார்.
அன்னா ஹஸாரேவை பா.ஜ.க ஏற்றுக்கொண்டபோது, ராம்தேவை தங்களின் பக்கம் சேர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சி முயல்வதாக சி.பி.எம்மின் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியை அரசு நடத்திவருவதாக சி.பி.ஐ தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
ராம் தேவின் போராட்டம் அரசியல் தூண்டுதல் என பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.ராம் தேவின் போராட்டத்தை நான் ஆதரிக்கமாட்டேன் என ஷாரூக் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார். ராம் தேவின் போராட்டத்திற்கு பின்னணியில் ஓர் அஜண்டா உள்ளது என ஷாரூக் மேலும் தெரிவித்தார்.
கோடிகளில் புரளும் யோகா குரு ராம்தேவை நான்கு மத்திய அமைச்சர்கள் விமான நிலையம் சென்று வரவேற்றதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏழைகள் பட்டினியால் வாடும் வேளையில் இரண்டு அல்லது மூன்று தினங்கள் மட்டும் உண்ணாவிரதப்போராட்டம் நடத்த ஜெட் விமானத்தில் பறந்து வந்தவரை வரவேற்க மத்திய அமைச்சர்கள் சென்றது ஏன் என்பது புரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ராம்தேவின் முயற்சியை எதிர்கொள்வதற்கான வழிகளை குறித்து நேற்று காங்கிரஸ் கட்சியின் மத்திய கமிட்டி விவாதித்தது.

No comments:

Post a Comment