ஜெய்ப்பூர்:இந்தியாவில் எந்த முறைகேடு நடந்தாலும் அதில் பா.ஜ.கவின் பங்கு இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் போலி விமானி லைசன்ஸ் (உரிமம்) வழக்கில் பா.ஜ.கவின் முன்னாள் அமைச்சரின் மகனும் சிக்கியுள்ளார்.
பவன் தின்வார், அங்கூர் கார்க், சித்தார்த் லோசாப், ரோஹன் ஸக்ஸேனா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க அரசின் அமைச்சர் மதன் தில்வார், ராஜஸ்தான் ப்ளையிங் ஸ்கூல் முன்னாள் பயிற்சி மைய தலைவர் மோஹிந்தர் குமார், ஹரியானா சிவில் விமான இன்ஸ்ட்யூட் பயிற்சி மைய தலைவர் மஹாவீர் சிங், சங்கனீர் விமான நிலைய ஏர்ட்ராஃபிக் கண்ட்ரோல் அஸிஸ்டண்ட் ஜெனரல் மேனேஜர் மனோஜ் ஜெயின் ஆகியோரின் உதவியுடன் இவர்கள் போலி ஆவணங்களை தயார் செய்துள்ளனர் என போலீஸ் கூறுகிறது.
இவர்கள் தாம் விமானம் ஓட்டிப் பயிற்சி செய்திருந்த காலத்தை சர்வதேச அளவில் ஓட்டியதாக பொய்யாக மிகைப்படுத்தி காண்பித்து பவான், அங்கூர், சித்தார்த் ஆகியோர் லைசென்ஸ் பெற்றுள்ளனர். ஆனால், கனடாவில் இருந்து லைசென்ஸ் பெற்ற ரோஹன் ராஜஸ்தான் ப்ளையிங் ஸ்கூலுடன் தொடர்புகொண்டு போலி ஆவணங்களை சமர்ப்பித்து அதனை இந்திய லைசென்ஸாக மாற்றியுள்ளார்.
நன்றி: தூது
No comments:
Post a Comment