Saturday 28 May 2011

லிபியா:எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு கத்தாஃபி தயார்


திரிபோலி:லிபியாவில் போரை நிறுத்திவிட்டு எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அந்நாட்டு அதிபர் முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார். இதனால் சில மாதங்களாக தொடரும் போராட்டம் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது. ஆனால், 40 வருடங்களுக்கு மேலாக பதவியில் தொடரும் கத்தாஃபி ராஜினாமா செய்ய சாத்தியமில்லை.

ஐரோப்பியன் யூனியன், ஐ.நா சபை உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கத்தாஃபியிடம் ராஜினாமா செய்ய கோரிக்கை விடுத்திருந்தனர்.


எதிர்ப்பாளர்கள் உள்பட அனைத்து லிபியா நாட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கத்தாஃபி தயார் என பிரதமர் அல் பாக்தாதி அல் மஹ்மூதி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் கடுமையான தாக்குதல் தலைநகரான திரிபோலியில் நேற்று நடந்தது.

திரிபோலியில் கத்தாஃபியின் வீட்டிற்கு அருகே குண்டு வீசப்பட்டதாக பத்திரிகைகள் கூறுகின்றன. ஆள் சேத பற்றி தகவல் இல்லை. டெலி கம்யூனிகேசன் அலுவலகம் உள்பட ஐந்து தாக்குதல்களை நேட்டோ போர் விமானங்கள் நடத்தியது. அரசு போர் நிறுத்தத்தை அறிவித்து சில நிமிடங்களுக்கு பிறகு இத்தாக்குதல் நடந்துள்ளது.

No comments:

Post a Comment