Friday 27 May 2011

அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக ஈராக்கில் பிரம்மாண்ட கண்டன பேரணி


பாக்தாத்:அமெரிக்க ராணுவத்தை நீண்டகாலம் ஈராக்கில் நிறுத்தி வைப்பதற்கான முயற்சி தொடரும் வேளையில் அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கோரி பாக்தாதில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. ஸதர் நகரத்தில் 20 ஆயிரம் பேர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். 2011 ஆம் ஆண்டு ராணுவம் வாபஸ் பெறப்படும் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்த பொழுதிலும் ஈராக் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரில் தற்போதும் ஈராக்கில் தொடர்கிறது.

ஷியா முஸ்லிம் தலைவர் முக்ததா அல் ஸதர் இப்பேரணிக்கு தலைமை வகித்தார். 2011 டிசம்பர் மாதம் அமெரிக்க ராணுவம் நாட்டை விட்டு வெளியேறும் என்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருநாடுகளிடையே ஒப்பந்தம் உருவானது. ஒப்பந்தத்தை பேண பிரதமர் நூரி அல் மாலிக்கி தயாராக வேண்டும் என ஸதர் கோரிக்கை விடுத்தார்.

பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி அமெரிக்கா தலைமயிலான கூட்டணி நாடுகள் ஈராக்கை ஆக்கிரமித்து துவசம் செய்தன. தொடர்ந்து ஈராக் அதிபர் சதாம் ஹுசைனை கைது செய்து விசாரணை நடத்தி கொலை செய்தனர். ஆனால், அமெரிக்காவால் எவ்வித பேரழிவு ஆயுதங்களையும் ஈராக்கில் கண்டுபிடிக்க முடியவில்லை

No comments:

Post a Comment