வாழ்க்கையில் சாதிப்பதகு ஊனம் ஒரு தடையல்ல என்பதினை நிரூபிக்கும் பல விதமான மனிதர்களை பற்றி நாம் கேள்விபட்டுள்ளோம். அத்தகைய ஓர் சிறுவனைப் பற்றிய சுவாரஸ்யமான செய்தியே இது.
அமெரிக்காவைச் சேர்ந்த 9 வயதான கோடி மெக்கஸ் லேண்ட் என்ற அச் சிறுவனிடம் சுமார் 20 செயற்கைக் கால்கள் உள்ளன.
இவை அனைத்தும் வெவ்வேறு விதமான போட்டிகளில் பங்கு பற்றுவதற்காக அச்சிறுவன் தன்னிடம் வைத்துள்ள வையாகும்.
இதுவரை பல விளையாட்டுக்களில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளான் கோடி.
இவன் குழந்தையாக இருக்கும் போதே இவனது கால்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.
எனினும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காத கோடி தனது முயற்சி மூலம் தன்னால் பல விளையாட்டுக்களில் சாதிக்கமுடியும் என்பதினை நிரூபித்துள் ளனா.
இவனது வெற்றிகளுக்கான இன்னுமோர் முக்கிய காரணம் இவனது பெற்றோ ராகும். அவர்களது ஊக்குவிப்பே இத்தகைய ஓர் தன்னம்பிக்கை மிக்க ஒரு வனாக மாற வழிவகுத்துள்ளது.
கோடியின் தற்போதைய இலக்கு உலக ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் ஓர் தங்கப் பதக்கத்தை வெல்வதே ஆகும்.
No comments:
Post a Comment