Friday 27 May 2011

பாப்ரி மஸ்ஜித்:உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ 19 வருடங்களுக்கு பிறகு கைது ..


பாட்னா:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் வேளையில் உணர்ச்சியை தூண்டும் வகையில் உரை நிகழ்த்திய அவுரங்காபாத்தை சார்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராமாதர் சிங் 19 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் இவரை 14 தினங்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

1995-ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் ராமாதர் சிங். அவுரங்காபாத் நீதிமன்றம் இவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. பீகார் மாநிலத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த இவர் கடந்தவாரம் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த உடனேயே பாட்னா உயர் நீதிமன்றம் ராமாதர் சிங்கிடம் கீழ் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது. பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமாரின் ஆட்சியின் நற்பெயரை கெடுக்க கூடாது என்பதால் பதவியை ராஜினாமா செய்வதாக ராமாதர் சிங் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

1992-ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வேளையில் முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்பு வாத துவேசத்தை உருவாக்கும் வகையில் உரை நிகழ்த்தியதாக ராமாதர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது.

No comments:

Post a Comment