Friday 27 May 2011

SDPi வெறும் அரசியல் கட்சியல்ல, ஒரு மிஷன்: இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய தலைமையுரை

பெங்களூரு: புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய தலைமையுரை:
பெரியோர்களே சகோதர சகோதரிகளே, நாம் மற்றொரு சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு சாட்சியாளராக இங்கு குழுமி இருக்கிறோம்.




ஜூன் 21, 2009 அன்று கரோல் பாக்கிலுள்ள ஹோட்டலின் அரங்கில் 29 பேர் முன்னிலையில் கட்சி தோற்றுவித்ததற்கான அறிவிப்பை வெளியிட்ட அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நான் நினைவுகூர்கிறேன். அப்போது தற்காலிக குழு அமைக்கப்பட்டது, இது தேர்ந்தெடுக்கப்படவில்லையெறாலும் அது பல்வேறு இந்திய மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறத்தக்கவகையில் பிரதிநிதிகளைக்கொண்டு அமைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.



அதேபோல அக்டோபர் 18,2009 அன்று கட்சியை நாட்டுக்கு அற்பணித்த அந்த நிகழ்வையும் நினைவுகூர்கிறேன். Ficci உள்ளரங்கில் நிரம்பிய பார்வையாளர்கள் மத்தியில் கட்சியை நாட்டிற்கு சமர்பித்தோம். இது ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் கட்சிகளின் பெயர்பட்டியலில் மற்றொன்றை சேர்க்கும் நிகழ்வல்ல. இந்திய மக்களுக்கு தொலைநோக்கு பார்வையை கொடுக்கும் நிகழ்வு. சுதந்திரத்திற்கு பிந்திய இந்தியாவை நன்கு ஆராய்ந்து பார்த்து பகுப்பாய்வு செய்ததின் விளைவாக தோன்றிய எதிர்கால இந்தியா குறித்த சரியான பார்வை இது.


மஹாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக உண்மையாக பாடுபட்ட சமுதாயங்கள் அரசியல் அதிகாரத்தை விட்டும்
புறந்தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம்கள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகாரத்தின் விழிம்பைக்கூட தொட அனுமதிக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் மற்றும் தலித்துகள் சாதீய பாகுபாட்டின் காரணமாக கடுமையாக பாதிப்புக்கு இலக்காயினர்.


ஆனால் முஸ்லிம் சமுதாயம் பாதிக்கப்பட்டது போல் எந்த ஒருவரும் சாதிய வன் கொடுமையால், பாகுபாட்டால் பாதிக்கப்படவில்லை என்பது ஆய்வில் நமக்குதெரியவருகிறது. முஸ்லிம்கள் இந்திய நாட்டிலேயே வாழ தகுதியற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டனர். வாழ்வதற்கு கூட உரிமையற்ற
சமுதாயமாக்கப்பட்டனர். கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, ஒருபுறம் சத்தமில்லாமல் திட்டமிட்ட இனப்படுகொலைகள், இனச்சுத்திகரிப்பு முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டது.

தேசப்பிரிவினை உயர்சாதியினரின் சதிச்செயல் என்றாலும், பிரிவினைக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை காரணமாக

முன்வைக்கப்பட்டு மனித படுகொலைகள் செய்யப்பட்டது. வழக்கமாக கூறப்படுவது போல இது சாதாரண வகுப்புக்கலவரமல்ல மாறாக உயர்சாதியினரின்
சதிச்செயல். உயர்சாதீய சக்திகளுக்கும் வகுப்புவாத சக்திகளுக்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் பிரித்தறிய திணறியது போலவே ஆர்எஸ்எஸ்சின் அரசியல் கொள்கைக்கும் காங்கிரசின் அரசியலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் அவர்களால் அறிய முடியவில்லை.


இந்தியாவில், இனபாகுபாட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட சமுதாயங்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதில் மேல்சாதீய நலன்விரும்பிகள் மிகுந்த
எச்சரிக்கையுடன் இருந்துவந்துள்ளனர். முஸ்லிம் தலித் ஒற்றுமை ஏறக்குறைய சாத்தியமான சூழ்நிலையில்தான் தேசப்பிரிவினை நிகழ்த்தப்பட்டது. அதேபோல 1980 களில் விபி.சிங்கின் அக்கறையுடங்கூடிய முயற்சியின் மூலம் மண்டல் கமிசனின் கீழ் முஸ்லிம்களையும் தலித்துகளையும் அவர் ஒன்றுபடுத்தியபோது அயோத்திய பிரச்சினையை முன்னிறுத்தி ஒற்றுமையை சிதைத்தனர்.


முஸ்லிம்களின் பின்னடைவை ஆராய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பிரச்சினையை களைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அக்கறையுடன் எடுக்கப்படவில்லை.


இதற்கிடையே 1980 க்கு பிறகு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகள் படிப்படியாக அதிகார சக்தியாக உருவெடுத்தனர். முஸ்லிம்கள் மட்டும்  அதிகாரத்தை விட்டு வெளியே இருந்தனர். முஸ்லிம் தலைமையும் அதிகாரத்தில் நுழைய சிந்தித்ததில்லை. அதிகார மையத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு பதில் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை பெறுவதை பற்றிய பேச்சுவார்த்தைகளில் மகிழ்ந்திருந்தனர்.


இந்த பின்னணியில்தான் புதிய சிந்தனை, முஸ்லிம் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் அரசியல் ஒற்றுமை என்ற கருத்துருவாக்கம்,
யோசனை உருவானது. இது ஒரு சில சமுதாயங்களின் முன்னேற்றம் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை மாறாக அனைத்து மக்களின் மேம்பாட்டிற்கான
அக்கறையுடன் கூடியது.


ஒரு சிலரின் கைகளில் மட்டுமே இதுவரை சிக்கியிருந்த அதிகாரத்தை மக்களுக்கு பங்கிட்டு கொடுப்பதே நமது லட்சியம். மக்களை ஆட்சி செய்யும் அரசர்கள் போன்ற ஆட்சியாளர்களை அகற்றுவோம், மக்கள் ஆள வழிவகைசெய்வோம். இதுவே சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா மக்களிடம் பகிர்ந்த்து கொள்ளும் யோசனை.
நமது கட்சி சிறியது என்றாலும் நம்மீது சுமத்தப்பட்ட பொறுப்பு  அளப்பெரியது. அதாவது நமது நாட்டைப்போல நமது கட்சியும் வளரவேண்டும்.


கட்சி தோற்றுவிக்கப்படும்போது அக்டோபர் 18,2009 அன்று பகிர்ந்துகொண்டவற்றை மீண்டும் கூறுகிறேன். நமது தேசத்தை அதன் உன்னதமான லட்சிய
விழுமங்களை அடிப்படை கொள்கைகளை நோக்கி மீண்டும் கொண்டுவருவது நமது கடமை. நமது நாட்டின் அடிப்படை கொள்கைகள் மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம். முன்னது ஏற்கெனவே ஏறக்குறைய காணாமல் போய்விட்டது. பிந்தியதைப் பொறுததவரையில் நாம் எங்கோ வழிமாறி போய்க்கொண்டிருக்கிறோம்.


மக்கள் நலன்சார்ந்த நீதியான பொருளாதார கொள்கைளை கொள்கையளவில் ஏற்றுள்ள நமது பொருளாதார கொள்கை தற்போது நம்து பொருளாதாரம் ஏகபோகமுதலாளி வர்க்கத்தினரின் கைகளில் சிக்கியுள்ளது. நாட்டின் மொத்த சக்கரத்தையும் நாட்டின் அடிப்படை கொள்கைகள் லட்சிய விழுமியங்கள் நோக்கி திருப்புவது தான் நாம் செய்ய வேண்டிய தலையாய பணி.


இதைச் சொல்லிய பிறகு நமக்கும் பிற அரசியல் கட்சிகளுக்குமிடையே உள்ள வேறுபாட்டை பற்றியும் அலச வேண்டும். பாரம்பர்ய மையநீரோட்டக் கட்சிகள் வளர்ச்சிக்கு புறம்பான கொள்கைகளை முன்வைக்கிறது. அவை வகுப்புவாத வேர்களிலிருந்து தோன்றியிருக்கும் அல்லது மக்கள் விரோத பணமுதலைகளின்  கைப்பாவையாக செயல்பட்டுக்கொண்டிருக்கும். அவை ஒரு குடும்பக்கட்சிகள் மேல்சாதி வர்க்க கட்டுப்பட்டில் உள்ளவை, உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊழலில் மூழ்கியவை.
மாநில கட்சிகளும் இதே போன்ற குணாதிசியங்களை கொண்டு மாநில அளவில் செயல்படுகிறது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் கட்சிகளில், தலைமை மேல்சாதியினராக இல்லையேயொழிய அவர்களின் கொள்கைகளை, வழிமுறைகளை, பாணியை, கட்டமைப்பை  அப்படியே ஏற்று கடைபிடித்து வருகின்றனர்.
முஸ்லிம் அரசியல் கட்சிகளும், ஜனநாயகம் மற்றும் ஊழலைப் பொறுத்தமட்டில் ஏறக்குறைய அதே கட்டமைப்பில், பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. கட்சிகள் இவற்றின் குடும்ப சொத்துக்கள். கேரள மாநில முஸ்லிம் லீக்காக இருந்தாலும், ஹைதரபாத்தின் மஜ்லிஸ் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது அச்சாமில்  செயல்படும் ஏயுடிஎஃப் ஆக இருந்தாலும் சரி அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தை ஒருபோதும் தங்கள் தொகுதியாக கருதுவதில்லை அங்கீகரித்ததில்லை, எப்போதும் சொந்த குடும்த்திற்காக சுய நலனுடன் செயல்பட்டுவருகின்றனர்.

எஸ்டிபிஐ அமைத்திருக்கும் இந்த அரசியல் தளம் முஸ்லிம்கள் தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட நாட்டில் வாழும் அனைவரையும்

அரவணைத்துக்கொள்ளும் அளவிற்கு விசாலமானது. மக்களின் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கல்வியாகட்டும் பொருளாதாரமாகட்டும் அல்லது சுற்றுப்புறச்சூழல் நலன் சார்ந்தவைகளாகட்டும் இவை போன்ற அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படும். புதிய பூகோளத்தை வடிவமைத்திருக்கிறோம் அதற்கு எல்லைகள் உண்டு. இந்த பூகோள எல்லையில் ஹிந்துக்கள் கிருத்துவர்கள் முஸ்லிம்கள் சீக்கியர்கள் பார்சீக்கள் ஆதிவாசிகள் தலித்துகள் மற்றும் பிற இந்தியர்களுக்கு உரிய பிரதிந்தித்துவம் உண்டு. வரையறுக்கப்பட்ட இந்த புதிய பூகோளத்தில் புதிய சரித்திரம் படைக்கவிருக்கிறோம்.


இந்த புதிய சரித்திரம் படைக்க நமது கட்டமைப்பை மீளாய்வு செய்வதும் அவசியம். இந்த புதிய சிறிய கட்சி 21 மாநிலங்களில் செயல்வீரர்களைக்கொண்டுள்ளது, 11 மாநிலங்களில் மாநில அளவிலான கமிட்டிகளைக்கொண்டு செயல்பட்டுவருகிறது என்பது பெருமை படத்தக்கது. நமது இலக்கு ஒரு வருடத்தில் 200000 செயல்வீரர்களைச் சேர்ப்பது. இந்த இலக்கை நாம் அடையவில்லை மிக மெத்தனமான போக்கை கடைபிடித்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு தேவையான இயற்கையான உத்வேகம் நம்மிடமில்லை. பிற முஸ்லிம் இயக்கங்கள் நன்கு செயல்படுகிறது. கேரள மாநில  முஸ்லிம் லீக்கின் அரசியல் வெற்றியை பாருங்கள். 24 தொகுதியில் 20 ஐ கைப்பற்றியுள்ளது. அவை கேரள மாநில வடக்கில் உள்ள சில பகுதியை சார்ந்திருந்தாலும் கேரள மாநிலத்தில் முஸ்லிம் அரசியல் இருப்பை இது தக்கவைத்துள்ளது.


தமிழ்நாட்டிலும் சிறிய அளவிலான பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இந்த மாநிலங்களில் தலித்துகள் மிகப்பெரிய அளவில் வசித்துவந்தாலும் அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை. தலித் சமுதாயத்தின் விருப்பத்தை பெற நாமும் தவறியுள்ளோம்.


மேற்கு வங்காளத்தை எடுத்துக்கொண்டால் அங்கு 30 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்துவருகின்றனர், மாநில மக்கள்தொகையில் 25 சதவீதம் முஸ்லிம்கள்.
ஆனால் அரசியல் பிரதிநிதித்துவம் உரிய அளவில் இல்லை. மேற்கு வங்காள முஸ்லிம்களை இதுவரை கவர முடியவில்லையென்றாலும் நம்மால் அது
சாத்தியமாகும்.


உபியிலும் பிஹாரிலும் நமது உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக குறைவே என்பதையும் நாம் உணர தவறவில்லை.

நண்பர்களே கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கேரளா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் முயற்சி செய்தோம். கேரளாவில் மட்டும் 82 வேட்பாளர்கள்.

குறிப்பிடும்படியான இருப்பை பிரதிநிதித்துவத்தை காட்ட முடியவில்லை. அங்கு மொத்த வோட்டுக்களின் எண்ணிக்கை 160000 தான். சராசரியாக 2000
அதிகரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் அதிகம் எதிர்பார்த்தோம். அங்கு நாம் பெற்ற அதிக வாக்கு எண்ணிக்கையே 6198 தான்.


120 கோடி இந்திய மக்கள் தொகையில், 20 கோடி பேர் முஸ்லிம்கள் ஏறக்குறைய 80 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். நமது உறுப்பினர்களின்
எண்ணிக்கையை இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடவேண்டாம். நாம் இன்னும் மக்களை சென்றடையவில்லை. புதிய கட்சி சிறிய கட்சி என்ற வாதங்களை
மக்களிடம் வைக்கலாம் ஆனால் நம்மை நாமே தேற்றிக்கொள்ள முயலக்கூடாது.


நண்பர்களே நாம் நத்தை வேகத்தில் மிக மிக மெதுவாக ஊர்ந்து சென்றுகொண்டிருக்கிறோம், அரசியலில் வேகம் மிக அத்தியாவசியம் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.  நமக்கும் குறைகள் உள்ளது என்பதை நாம் நம்கறிவோம். 


இந்த 21 ஆம் நூற்றாண்டிற்கான நவீன அரசியல் தொலைநோக்குப் பார்வையுடன் நாம்
உருவெடுத்துள்ளோம். இது தொடர்பாக எந்த முன்மாதிரியும் நமக்கில்லை. இந்த புதிய சிந்தனைக்கு நாமே முன்னோடி. புதிய உலகில் போராட்ட களத்தை
மட்டுமே நாம் கொண்டிருக்கிறோம். அரசியலின் கிழிந்த பக்கத்திலிருந்து நாம் காப்பியடிப்பதில்லை. சுத்தமான கரும்பலகையில் முதல் எழுத்தை எழுத
தயராயிருக்கிறோம். இது போன்ற குறைபாடுகள் நம்மிடையே உண்டு. நம்முடைய சக்தி ஒடுக்கப்பட்டவர்களின் சக்தி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த புனித யாத்திரையில் முன்னேறுவதற்கு இத்தகைய உந்துசக்திகளை வீரியப்படுத்தவேண்டும். இந்த கடினமான பயணத்தில் நம்மை வழிநடத்த மிகவும் வலுவான தலைமையை தேர்ந்தெடுக்கவேண்டும். இந்த கட்சி தனிநபர் துதிபாடும் கட்சியல்ல. தனிநபர் இங்கு முக்கியமல்ல. தலைமையேற்று வழிநடத்தும் பண்புதான் இங்கு மிக முக்கியம். நம்மிடையே தேர்ந்தெடுக்கும்போது நாட்டின் வருங்கால தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.


இந்த இரண்டு நாள் அமர்வில், இரண்டாவது முக்கியமான விஷயம் மக்கள் மனதில் நமது கட்சி நன்கு பதிவாக நடைமுறைச்சாத்தியமுள்ள திட்டங்களையும்  செயல்பாடுகளையும் வகுத்துக்கொள்ள வேண்டும். புதிய பாதை அமைத்து புதிய நடவடிக்கை திட்டங்கள் அமைத்து செயல்படவேண்டும்.


எனது உரையை நிறைவுசெய்யும் முன்பாக ஒரு முக்கியமான அம்சத்தை வலியுறுத்த விரும்புகிறேன். நமக்கு சவாலாக நமக்கெதிராக பலர் திரும்பியுள்ளனர், மதச்சார்பின்மை மற்றும் போலி மதச்சார்பின்மை பேசுவோர், தலித்து ஆளும் வர்க்கம் இதுபோன்று முஸ்லிம் கட்சிகளும் நமக்கெதிராக திரும்பியுள்ளனர். பாஜக வும் கம்யூனிஸ்டுகளும் நமக்கு எதிராக உள்ளனர்.


ஒரு சிறிய சம்பவத்தை சாக்காக வைத்து கொண்டு எஸ்டிபிஐ கட்சியின் 100 க்கும் மேற்பட்ட அலுவலங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நமது தலைவர்கள்  மிரட்டப்பட்டனர். ஆர்எஸ்எஸ் போன்ற வகுப்புவாத சக்திகளால் நமது செயல் வீரர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் நான் சத்தியமிட்டு சொல்கிறேன் நம் இயக்கத்தை எவராலும் தடுக்க முடியாது.


நண்பர்களே, இந்த அரசியல் கட்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் என்று ஒருவர் ஆச்சர்யப்படலாம். காரணம் மிக எளிமையானது. மற்ற பிற அரசியல் கட்சிகள் சிறியதோ அல்லது பெரியதோ இடது சாரியோ அல்லது வலது சாரியோ அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மையுடன் உருவானது தான்  சோசியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியா. ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும் திராணியுள்ள பச்சைக்குழந்தையின் வெள்ளை மனதுடன்,"அதுவல்ல, இது தான் பாதை" என்று சுட்டிக்காட்டும் கட்சி இது. இதுபோன்ற குணநலங்கள் உள்ளவர்கள் வரலாறு நெடுகிலும் எதிர்ப்பையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளனர். வரலாறும் இவர்களுக்குத்தான் சொந்தம்.


அடிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சமுதாயங்களின் இளைஞர்களின் கோபாவேசத்தை அளவிட தெரியாதவர்கள் அரசியல் உருவாக்கத்தை நம்ப மறுக்கிறவர்களிடமிருந்து எதிர்ப்பு வரத்தான் செய்யும். அவர்களை நாம் உதாசினம் செய்யலாம் அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதற்காக நீங்கள் தயாராக இருங்கள் நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.


எஸ்டிபிஐ வெறும் அரசியல் கட்சியல்ல. இது ஒரு மிஷன். மக்களின் ஆழ்ந்த துயரத்திற்கு மத்தியில் அவர்களின் உள்ளக்கிடக்கையின் மனசாட்சியின்
வெளிப்பாடு இது. இதுபோன்ற இயக்கங்கள் தான் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும். நான் ஏற்கெனவே கூறியுள்ளது போல நமது நாட்டிற்காக புதிய வரலாறு  படைக்க புதிய பூகோளத்தை வரையறுத்திருக்கிறோம். நாம் இதில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நிகழ்காலத்தின் அர்பணிப்பு ஒளிமயமான எதிர்காலத்திற்காக .

No comments:

Post a Comment