சென்னை: கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் பெரும் இழுபறிக்குப்
பின்னர் இன்று வெளியிடப்பட்டது. இணையதளத்தில் முடிவுகளைக் காண தமிழ்நாடு
அரசுப் பணிகள் தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த திமுக
ஆட்சிக்காலத்தில், பிப்ரவரி மாதம் 20ம் தேதி கிராம நிர்வாக அலுவலர் தேர்வு
நடைபெற்றது. மொத்தம் உள்ள 3484 காலியிடங்களுக்காக நடந்த இந்தத் தேர்வில்
கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இந்த முடிவுகள்
வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தேர்வு
முடிவுகள் வெளியாகாது என்றும் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அரசு அதை
மறுத்திருந்தது. இந்த நிலையில் இன்று இணையதளத்தில் தேர்வு முடிவுகளை
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
தேர்வு முடிவுகளை http://www.tnpsc.gov.in/recruitnresults.htm என்ற இணையதளத்தில் காணலாம்.
No comments:
Post a Comment