Tuesday, 19 July 2011

எம்.பி.பி.எஸ். 2வது கல‌ந்தா‌ய்வு 28ஆ‌ம் தேதி தொடங்குகிறது

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான 2வது கட்ட கல‌ந்தா‌ய்வு வரு‌ம் 28ஆ‌ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4‌ஆ‌ம் தேதி வரை நடைபெறும் என்று மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனரும், தேர்வுக்குழு செயலாளருமான டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2011-2012ஆம் ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளில் சேருவதற்கான முதல்கட்ட கல‌ந்தா‌ய்வு நீட்டிப்பு வரு‌ம் 28ஆ‌ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4‌ஆ‌ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி கூட்ட அரங்கில் க‌ல‌ந்தா‌ய்வு நடத்தப்படும்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் இடமாறுதல், அரசு மற்றும் தனியார் மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள காலி இடங்களில் சேருவது ஆகியவற்றுக்காக இந்த கல‌ந்தா‌ய்வு நடத்தப்படுகிறது.
எந்தெந்த கட் ஆப் மார்க்கிற்கு எந்தெந்த நாளில் கல‌ந்தா‌ய்வு? என்ற பட்டியல் தமிழக அரசின் சுகாதாரத்துறை இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.åஸீலீமீணீறåலீ.ஷீக்ஷீரீ) வெளியிடப்பட்டு இருக்கிறது. தினசரி காலி இடங்களின் நிலவரங்களையும் இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
காலி இடங்களை விட கூடுதலாகவே மாணவ-மாணவிகள் கல‌ந்தா‌ய்‌விற்கு அழைக்கப்படுகிறார்கள். எனவே, காலி இடங்களைப் பொருத்துதான் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தேர்வு செய்யப்படுவோர் ரூ.12,290ஆம் (எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு ரூ.10,290 மட்டும்) பி.டி.எஸ். படிப்புக்கு தேர்வு செய்யப்படுவோர் ரூ.10,290ஆம் (எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.9,290 மட்டும்) கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
உரிய கட்டணத்தை ''செயலாளர், தேர்வுக்குழு, சென்னை-10'' என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாக கட்ட வேண்டும். இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் ஒருவேளை கல்லூரியில் சேராவிட்டால் கட்டணம் திருப்பிக்கொடுக்கப்பட மாட்டாது. தனியார் கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றவர்கள் கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். இதையும் மேற்கண்ட முறையிலேயே கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாளில் கல்லூரியில் சேராவிட்டால், கட்டணத்தில் 50 சதவீதம் மட்டும் திருப்பிக் கொடுக்கப்படும் எ‌ன்று ஷீலா கிரேஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

No comments:

Post a Comment