Tuesday 19 July 2011

நோய் தடுப்பில் இந்தியாவை தாண்டிய சீனா


ழை, எளிய மக்களைப் பாதிக்கும் தொற்று நோய்களை தடுப்பதிலும், நகர மயமாக்கால் அதிகரிக்கும் உயிர்கொல்லி தொற்று நோய்களால் பாதிக்கப்படுவோரை குறைப்பதிலும் இந்தியாவை விட சீனா மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் உலக நல்வாழ்வு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.


ஜெனீவாவில் உலக நல்வாழ்வு அமைப்பின் 64வது மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நோய் தடுப்பில் சிறப்பாக செயலாற்றியதன் விளைவாக சீனாவில் சராசரி வாழ்க்கைக் காலம் 2000 ஆவது ஆண்டில் 61 ஆக இருந்தது 2009இல் 74 ஆக உயர்ந்துள்ளது என்றும், இதே காலகட்டத்தில் இந்தியாவில் 61 வயது என்பது 65 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

2003
ஆம் ஆண்டிற்குப் பிறகு நலவாழ்விற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது மட்டுமின்றி, மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களையும் சீனா அதிகப்படுத்தியுள்ளதே அதன் சிறப்பான செயல்பாட்டிற்குக் காரணம் என்று உலக நலவாழ்வு அமைப்பு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் இன்னமும் குழந்தை பிறப்பின்போது தாய் மரணிப்பதும், குழந்தை இறந்து பிறப்பதும், பிறந்த பின் குறுகிய காலத்தில் இறப்பதும் அதிகமாக உள்ளதெனவும், ஏழை எளிய மக்களிடையே தொற்று நோய் பரவல் அதிகமாக உள்ளதெனவும், நகர வாழ் நடுத்தட்டு மக்களிடையே தொற்று நோயற்ற இதர நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதெனவும் ஐ.நா.உலக நலவாழ்வு அமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment