Tuesday, 19 July 2011

தமிழகத்தின் மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர் கிராமவாசிகள்: ஆய்வுத் தகவல்

தமிழக மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள்.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.


அதில் தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அதாவது 52 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர்.

தலைநகர் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 48 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.

தமிழகத்தில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரத்து 229 ஆகும்.

பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 49 ஆயிரத்து 729 ஆகும்.

சென்னையில் நகர்ப்புற மக்கள் தொகை 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல விழுப்புரத்தில் கிராமப்புற மக்கள் எண்ணிக்கை 7.94 சதவீதம் உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1041 பெண்கள் உள்ளனர். இங்கு தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்.

No comments:

Post a Comment