4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 3 காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது.
தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திரகாந்த் பி.காம்ளே மாற்றப்பட்டு, மீன்வளத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரே, தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறை ஆணையர் பி.சந்திரமோகன் மாற்றப்பட்டு, தொழிலாளர் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நில சீர்திருத்தத் துறை இயக்குனர் ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு, வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை இணை செயலாளர் ஆர்.வாசுகி, வேளாண்மைத் துறை இணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத்துறை ஆணையர் எம்.பி.நிர்மலா, நில சீர்திருத்தத் துறை இயக்குனர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார் என்று அரசு தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தெரிவித்துள்ளார்.
இதபோல் சேலம் சரக டி.ஐ.ஜி. ஜி.வெங்கடராமன், சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை
காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தலைமையக துணை ஆணையராக பணியாற்றும்
ஆசியம்மாள், லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பாளராக (மேற்கு சரகம்)
நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவில்
சப்ளை சி.ஐ.டி. கண்காணிப்பாளர் மகேஸ்வரியும் லஞ்ச ஒழிப்பு
கண்காணிப்பாளராக (தெற்கு சரகம்) மாற்றப்பட்டுள்ளார் என்று அரசின்
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment