Tuesday, 19 July 2011

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு: பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றம்

இந்தோனேசியாவின் சுலாவேசியில் உள்ள மவுண்ட் லோகோன் எரிமலை நேற்று  இருமுறை வெடித்ததால் சாம்பல் புகை வானத்தில் சுமார் 2000 அடி வரை எழும்பியது.

இது அபாயகரமான எரிமலையாகக் கருதப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.


இந்த லோகோன் எரிமலை பல ஆண்டுகள் அமைதியாக இருந்தது. ஆனால் கடந்த வாரம் இது உயிர் பெற்று மீண்டும் வெடித்தது.

ஞாயிறன்று இந்த எரிமலை வெடித்த போது சாம்பல் புகை அதிகபட்சமாக 11,400 அடி வானில் உயரே எழும்பியது.

இந்தோனேசிய தீவுக் கூட்டப்பகுதியில் டஜன் கணக்கில் பயங்கர எரிமலைகள் உள்ளன.

பசிபிக் மற்றும் இந்திய கடலில் அபாயம் ஏற்படக்கூடிய "பசிபிக் நெருப்பு வளையம்" என்ற பகுதியில் இத்தீவுக் கூட்டங்கள் உள்ளன.

இதனால் இங்கு எரிமலை அபாயம் மற்றும் இதர இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன.

எரிமலை பாதிப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கு இயற்கை பேரிடர் நிர்வாக முகமை சார்பில் 35 ஆயிரம் டாலர் அவசர நிதியாக அளிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment