ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,200 கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய
அரசின் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதுடன்
ஏறத்தாழ 67 ஆயிரம் கோடி கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது.
நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்காக, உரிய நடவடிக்கை எடுக்கும்படி நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன்சிங் அண்மையில் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம், பிரணாப் முகர்ஜி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஏர் இந்தியா
நிறுவனத்துக்கு ரூ.1,200 கோடி நிதி உதவி வழங்குவதற்கு ஒப்புதல்
அளிக்கப்பட்டது.
இந்த தகவலை ஏர் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் அரவிந்த் ஜாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment