ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா மிக கடுமையான வறட்சி நிலையை எட்டி உள்ளது.
அந்த நாட்டை சேர்ந்த 15 லட்சம் மக்கள் உயிர் பிழைக்க அருகாமையில் உள்ள நாடுகளுக்கு ஓடி வந்துள்ளனர்.
சோமாலியாவின் வறட்சி குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும்
வேளாண் அமைப்பு அவசர கூட்டத்தை நடத்துகிறது. பிரான்சின்
வேண்டுகோளை
தொடர்ந்து இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதனை பிரான்ஸ் நிதித்துறை அமைச்சர்
அலய்ன் ஜூபே தெரிவித்தார்.
இந்த கூட்டம் தற்போதைய பதவி முடிந்து செல்லும் உணவு மற்றும் வேளாண்
அமைப்பு இயக்குனர் ஜெனரல் ஜாக்குஸ் டியோப் தலைமையில் ரோமில் நடைபெறுகிறது.
அந்த கூட்டத்தில் சோமாலியாவுக்கு அளிக்கப்படும் சிறப்பு நிவாரண உதவி
பற்றி அறிவிக்கப்படும். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக உலக உணவு திட்டம்
மற்றும் சர்வதேச தொண்டு ஒக்ஸ்பாம் ஆகியவை உடனடி நிவாரண உதவி கோரி
வேண்டுகோள் விடுத்தன.
சோமாலியா பிராந்தியத்தில் 1 கோடியே 20 லட்சம் மக்கள் பசி, பட்டினியால்
வாடுகிறார்கள். அவர்கள் உயிருக்கு போராடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment