Tuesday, 19 July 2011

சிரியா கலவரம்: 30 பேர் பலி

டமாஸ்கஸ் : சிரியாவின் ஹோம்ஸ் நகரில், அதிபர் பஷர் அல் அசாத் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே நடந்த மோதல் மற்றும் கலவரத்தில், 30 பேர் கொல்லப்பட்டனர். .


சிரியாவில், அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான கிளர்ச்சி, அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே கலவரமாக வெடித்துள்ளது. முக்கிய நகரமான ஹோம்ஸ் நகரில், இருதரப்புக்கும் இடையே நடந்த மோதல் மற்றும் கலவரத்தில் 30 பேர் கொல்லப்பட்டனர்.


ஹோம்ஸ் நகரில், கடந்த வாரம் அதிபருக்கு ஆதரவானோர் மூன்று பேர் கடத்தி கொல்லப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்தே இந்நகரில் கலவரம் வெடித்திருப்பதாகவும், லண்டனை இருப்பிடமாகக் கொண்ட சிரியா மனித உரிமை கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறுகையில், ""ஆட்சிக்கு எதிரான புரட்சி, தற்போது இருதரப்புக்கும் இடையே கலவரமாக வெடித்துள்ளது. இருதரப்பினரும் தடி மற்றும் ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். இது ஆபத்தாக உருவாகியுள்ளது,'' என்றார்.


சிரியாவில் முக்கியமாக, தற்போது சன்னி முஸ்லிம்களுக்கும், அதிபர் ஆதரவாளர்களுக்கும் இடையே தாக்குதல் நடந்து வருகிறது என்றும், சில தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment