மும்பை : மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக போலீஸ் கஸ்டடியில் விசாரணைச் செய்யும் வேளையில் சித்திரவதை காரணமாக கொல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மானியின் மரணம் தொடர்பான விசாரணையை சி.ஐ.டி போலீசார் துவக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக செம்பூர்
க்ரைம்ப்ராஞ்ச் தலைவர் ஸ்ரீபத் கலே மற்றும் ஃபயாஸ் உஸ்மானியின்
குடும்பத்தினர் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யவிருப்பதாக சி.ஐ.டி
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போலீஸின் சித்திரவதையினால் ஃபயாஸ்
மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து
மஹாராஷ்ட்ரா மாநில டி.ஜி.பி சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார். ஃபயாஸின்
மரணம் மும்பை குண்டுவெடிப்பு புலனாய்விற்கு பாதகம் விளைவிக்கும் என பெயர்
வெளியிட விரும்பாத மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஃபயாஸின் மரணம் துரதிர்ஷ்டவசமானது என மும்பை
துணை போலீஸ் கமிஷனர் நிஸார் தபோலி தெரிவித்துள்ளார். விசாரணை செய்ய
அழைத்துவரும்போது உடல்நல பாதிப்பு இல்லை எனவும், சிறிது நேரம் கழித்து அவர்
மயங்கி விழுந்ததாகவும் உடனடியாகவே அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும்
நிஸார் தெரிவித்துள்ளார். ஃபயாஸிற்கு மருத்துவ உதவி அளிப்பதில்
போலீஸாருக்கு தவறுதல் ஏற்படவில்லை என அவர் மேலும் கூறினார்.
ஃபயாஸின் மரணம் சாதாரணமானது என
போஸ்ட்மார்ட்டம் நடத்திய ஜெ.ஜெ.மெடிக்கல் காலேஜ் டீன் டாக்டர்.டி.வி.லஹானே
தெரிவித்துள்ளார். உள் உறுப்புகளின் வேதியியல் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே
இறுதி அறிக்கை தயார் செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஃபயாஸின் மரணத்தை குறித்து சரியான முறையில்
விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கஸ்டடி
மரணமும், சித்திரவதையும் தவிர்ப்பதற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை
செய்யவேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறியுள்ளார்.
மும்பை:மும்பை
குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக போலீஸ் கஸ்டடியில் விசாரணைச் செய்யும்
வேளையில் சித்திரவதை காரணமாக கொல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மானியின் மரணம்
தொடர்பான விசாரணையை சி.ஐ.டி போலீசார் துவக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக செம்பூர்
க்ரைம்ப்ராஞ்ச் தலைவர் ஸ்ரீபத் கலே மற்றும் ஃபயாஸ் உஸ்மானியின்
குடும்பத்தினர் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யவிருப்பதாக சி.ஐ.டி
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போலீஸின் சித்திரவதையினால் ஃபயாஸ்
மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து
மஹாராஷ்ட்ரா மாநில டி.ஜி.பி சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார். ஃபயாஸின்
மரணம் மும்பை குண்டுவெடிப்பு புலனாய்விற்கு பாதகம் விளைவிக்கும் என பெயர்
வெளியிட விரும்பாத மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஃபயாஸின் மரணம் துரதிர்ஷ்டவசமானது என மும்பை
துணை போலீஸ் கமிஷனர் நிஸார் தபோலி தெரிவித்துள்ளார். விசாரணை செய்ய
அழைத்துவரும்போது உடல்நல பாதிப்பு இல்லை எனவும், சிறிது நேரம் கழித்து அவர்
மயங்கி விழுந்ததாகவும் உடனடியாகவே அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும்
நிஸார் தெரிவித்துள்ளார். ஃபயாஸிற்கு மருத்துவ உதவி அளிப்பதில்
போலீஸாருக்கு தவறுதல் ஏற்படவில்லை என அவர் மேலும் கூறினார்.
ஃபயாஸின் மரணம் சாதாரணமானது என
போஸ்ட்மார்ட்டம் நடத்திய ஜெ.ஜெ.மெடிக்கல் காலேஜ் டீன் டாக்டர்.டி.வி.லஹானே
தெரிவித்துள்ளார். உள் உறுப்புகளின் வேதியியல் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே
இறுதி அறிக்கை தயார் செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஃபயாஸின் மரணத்தை குறித்து சரியான முறையில்
விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கஸ்டடி
மரணமும், சித்திரவதையும் தவிர்ப்பதற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை
செய்யவேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment