இந்திய ரயில்வே புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த சேவையில் முகவர்களுக்கு இடமில்லை. தனிப்பட்ட நபர்கள் மட்டுமே
முன்பதிவு செய்ய முடியும்.
புதிய இ-டிக்கெட் சேவையின்படி, தனிப்பட்ட
வாடிக்கையாளர்கள் தாங்களாகவே பதிவுசெய்து கொண்டு இந்த சேவையைப் பெறலாம்.
பதிவுசெய்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை.
தொடக்கத்தில் ஒரு
வாடிக்கையாளர் ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 8 பரிமாற்றங்கள் வரை பயன்படுத்த
அனுமதிக்கப்படுவார். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 5 ரூபாயும், இதர
வகுப்புகளுக்கு 10 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஐஆர்சிடிசியில்
தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 10 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 20
ரூபாயும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த புதிய சேவையை
www.indianrailways.gov.in இணையதளத்தின் மூலம் பெறலாம். இந்த சேவை
தொடங்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். பகல் 12.30 மணியில் இருந்து
இரவு 11.30 மணி வரை இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment