Thursday 7 July 2011

மருத்துவ படிப்பு: 599 இடங்கள் காலியாக உள்ளன

சென்னை : மருத்துவ கல்லூரிகளில் 599 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு நடந்த முதல் கட்ட கவுன்சிலிங்கில் 1724 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.



தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. கடந்த ஆண்டு 8 தனியார் மருத்துவ கல்லூரிகள் இருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக பெரம்பலூர், சேலம் ஆகிய இடங்களில் 2 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.இது தவிர ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 இடங்கள் உள்ளன.

இந்நிலையில் மருத்துவ கல்லூரிகளில் 599 இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு நடந்த முதல் கட்ட கவுன்சிலிங்கில் 1724 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் இது வரை 599 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு 22ம் தேதிக்கு பிறகு 2வது கட்ட கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 85 இடங்களில் 12 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. எஞ்சிய அரசு மற்றும் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப 2வது கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment