Thursday 7 July 2011

வாடகை வீட்டில் குடிஇருப்போர் கவனத்திற்கு!!

சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிபவர்களுக்கு வீடு கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன அதையும் மீறி வீடு கிடைத்தாலும் வீட்டுரிமையாலர் என்ற பெயரில் சிலர் மாவட்ட கலைக்டரை போல் நடந்து கொள்வர்.எனவே வாடகை வீட்டில் வசிப்பவர்களை காக்க சட்டம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. 
அவை:   "சரியான காரணமின்றி வீட்டு உரிமையாளர் ஒருவர் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய சொல்ல முடியாது". இது தொடர்பாக ஐகோர்ட்டு மூத்த வக்கீல் ஏ.கே.எஸ்.ஏ. தாகீர் கூறும்போது, வாடகைக்கு இருப்பவர்களை வீட்டு உரிமையாளர் நினைத்தவுடன் காலி செய்ய சொல்ல முடியாது. 3 மாதம் கால அவகாசம் கொடுக்கவேண்டும். 
இதன் பின்னர்தான் வீட்டு உரிமையாளர் காலி செய்ய சொல்லி நோட்டீசு அனுப்ப முடியும்.இந்த நோட்டீசுக்கு வாடகை தாரர் பதில் நோட்டீசு அனுப்பினால், வாடகை பிரச்சினை கோர்ட்டுக்கு வந்து விடும்.இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டால் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை வாடகைக்கு இருப்பவரை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

வக்கீல் பிலால் 
கூறும்போது:- 

வாடகைக்கு இருப்பவரை என்ன காரணத்துக்காக காலி செய்ய சொல்கிறோம் என்பதை உரிமை யாளர் கோர்ட்டில் ஆதாரங்களுடன் விளக்கவேண்டும். தேவை யில்லாத காரணங்களை கூறி வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய சொல்ல முடியாது. வாடகை தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வருவதற்கு 6 மாதம் வரை ஆகலாம்.
வானதி சீனிவாசன் (ஐகோர்ட்டு வக்கீல்):-

தமிழ்நாடு குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு என்ற தனிச்சட்டமே உள்ளது. இந்த சட்டத்தின்படி தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு வாடகை வசூலிக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை மீறி வாடகையோ, குத்தகையோ வசூலித்தால் நியாயமான வாடகை வசூலிக்க கோரி சிவில் கோர்ட்டில் மனு போடலாம். கோர்ட்டு வாடகையை நிர்ணயித்து அறிவிக்கும்.

அதே மனுவிலேயே கூடுதலான மின் கட்டண வசூல் பற்றியும் 
முறையிடலாம்.

No comments:

Post a Comment