Thursday, 7 July 2011

ராகுல் காந்தியை பார்த்து பயப்படும் பாஜக!

ராம்பூர், உ.பி: அடுத்த ஆண்டு உ.பி மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி மாயாவதி தலைமையிலான அரசுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஆக்கம் ஊட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரையை துவக்கியுள்ளார்.

விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்திய விவகாரத்தில் மாயாவதி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டதை பெரும்பாலும் அரசியல் ஆதாயமாக மாற்றும் முயற்சியில்தான் ராகுல் அலிகருக்கு பாதயாத்திரை புறப்பட்டுள்ளார்.
விவசாயிகளின் நிலத்தை பெரும் பணமுதலைகளுக்கு கோபுரங்களை கட்டுவதற்கு கையகப்படுத்திய உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் பலத்த அடியை கொடுத்துள்ளது.  இந்நிலையில் ராகுல் காந்தியால் எவ்வித மாற்றத்தையும் உ.பியில் கொண்டு வர முடியாது என பாசிச பயங்கரவாத ஹிந்துத்துவா உமாபாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பாரதிய ஜனதா கட்சிக்கு ராகுல் காந்தியை கண்டால் ஒரு வித பீதி. பாரதிய ஜனதாவின் ஹிந்துத்துவா ஆராஜகங்களை, பயங்கரவாதத்தை வெளி கொண்டு வரும் பணியை தொய்வில்லாமல் ராகுல் செய்து வருகிறார். இதனால் இவர் எதை செய்தாலும் அதற்க்கு பாசிச பாரதிய ஜனதா கட்சி தொர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment