Thursday, 7 July 2011

சீனாவில் ஃபேஸ்புக்கிற்கு தடை! விலைக்கு வாங்க சீனா திட்டம்! மக்கள் எதிர்ப்பு

பேஸ்புக் இணையத்தளத்துக்கு தடை விதித்துள்ள சீன அரசு அந்த இணையத்தளத்தை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.
சீன அரசின் முதலீட்டு அமைப்பான சீனா சாவ்ரீன் வெல்த் பண்ட் பேஸ்புக் இணையத்தளத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முயற்சித்து வருகிறது.


பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து பங்குகளை விலைக்கு வாங்கும் நிறுவனத்துடன் இது தொடர்பாக சீன நிதி அமைப்பு பேசி வருகிறது.

மேலும் சிட்டி பேங்க் மூலமாகவும் 1.2 பில்லியன் மதிப்புள்ள பேஸ்புக் பங்குகளை வாங்க சீனா முயன்று வருவதாகத் தெரிகிறது. அதிகபட்சமான பங்குகளை வாங்கி அதன்மூலம் பேஸ்புக் இணையத்தளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா முயல்வதாகத் தெரிகிறது.

சுமார் 700 மில்லியன் பயனீட்டார்களைக் கொண்ட பேஸ்புக் இணையத்தளம் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எப்படியாவது சீனாவிலும் கால் பதிக்க பேஸ்புக் தீவிரமாக உள்ள நிலையில் அந்த நிறுவனத்தையே வாங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா தீவிரம் காட்டி வருகிறது.

பேஸ்புக்கை சீனா வாங்கத் திட்டமிட்டுள்ள செய்தி சீனர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. தங்கள் வருத்தத்தை சில சீனர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் பிளாகுகளில் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment