கர்நாடக சிறையில் உடல்நல குறைவால் அவதிப்படும் அப்துல் நாசர் மதானி
கேரளா மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி கடந்த 2010 ஆகஸ்டில் கர்நாடக போலிசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த பலவருடங்களாக கோவை சிறையில் இருந்த அவர் நிரபராதி என கூறி விடுதலை செய்யப்பட்ட சில மாதங்களில் மீண்டும் கைது செய்யப்பட்டது முஸ்லிம் சமுகத்தை பெரும் துயரில் ஆழ்த்தியது.
பெங்களூரில் 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட மதானி கர்நாடகாவில் உள்ள அகர்கர மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த குண்டு வெடிப்பு பற்றி ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா வெளியிட்டுள்ள செய்தியில் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் போலிசாரால் திட்டமிட்டு சாட்சிகள் ஜோடிக்கபட்டதாகவும் கூறியது.
இந்தநிலையில் கர்நாடக பாஜக அரசின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மதானி கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் வழக்கில் வேண்டுமென்றே சேர்கப்பட்டதாகவும், உடல்நலத்தை கருத்தில் கொண்டு மதானியை விடுதலை செய்யவேண்டும் என அவரது குடும்பத்தினர் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில்? தொடுக்கப்பட்ட வழக்கு
தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில்
மேல்முறையீடு செய்யப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்
மதானிக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு
உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து தீர்பளித்தது. இதன்படி கடந்த ஜூன் -7 அன்று
தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். 28
நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நேற்று (5 .7 .2011) மீண்டும் சிறையில்
அடைக்கப்பட்டார்.
மதானியை பரிசோதித்த டாக்டர்கள் கூறும்போது, பல்வேறு
நோய்களால் பாதிக்கப்படிருப்பதகவும், மூன்று வாரங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து
மருத்துவ சிகிச்சை பெறவேண்டும் என்றும் தெரிவித்தனர். மதானி கண் பார்வை
கோளறு, நீரிழிவு நோய், இரத்தகொதிப்பு ஆகிய நோய்களால்
பாதிக்கப்பட்டுள்ளார்.
அதுபோல், மதானி மீது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் வீசிய
வெடிகுண்டு தாக்குதலில் தனது ஒரு காலை இழந்தார். தற்போது செயற்கை காலை
பயன்படுத்தி வருகிறார். தொடர்ந்து பலவருடங்களாக செயற்கைக்காலை பயன்படுத்தி
வருவதால் காலில் கடுமையான வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
இதன் பக்க
விளைவாக முதுகு வலியாலும் கஷ்டப்பட்டுவருகிறார். முஸ்லிம்களுக்காக போராடியதை
தவிர எந்த குற்றமும் செய்யாத மதானி சிறையில் வாடி வருவது பற்றி யாரும்
கவலை பட்டதாக தெரியவில்லை.
கேரளாவில் செல்வாக்குடன் கூட்டணி ஆட்சி நடத்தும்
முஸ்லீம் லீக் கட்சி மதானி சிறையில் இருப்பதையே விரும்புவது போல் நடந்து
வருகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் ஆயிரக்கணக்கான மக்களைகொலை செய்த அத்வானி, நரேந்திரமோடிகலேல்லாம், சுதந்திரமாக
உலா வந்து கொண்டிருக்கும் போது எந்த குற்றமும் செய்யாத மதானி போன்றவர்கள்
சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இது தான் ஜனநாயக இந்தியாவோ?
நன்றி : Situation India
நன்றி : Situation India
No comments:
Post a Comment