|
|
மகளிர் குறித்த ஐ நா அறிக்கை வெளியாகியுள்ளது |
உலகெங்கும் உள்ள பெண்கள்
முன்னெப்போதும் இருந்ததைக் காட்டிலும் அதிக சுதந்திரத்தை அனுபவித்து
வருவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள்
சபையின் அறிக்கை, அதே நேரம் அவர்கள் வேலையிடங்களில்
பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாகவும், வீட்டில் தொடர்ந்து வன்முறைகளுக்கு
ஆளாவதாகவும்
கூறியுள்ளது.
சமத்துவத்தையும், நீதியையும் நிலை நாட்டும் பொருட்டு இயற்றப்பட்ட சட்டங்கள் எப்போதும் நடைமுறைப்படுத்தப்படாமல் ஏட்டுச் சுரைக்காயாக
இருப்பதாகவும் மகளிருக்கான ஐ நா அமைப்பான யு என் உமன் தனது முதல் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வித்தியாசம் நிலவுவதாகவும், உலகில் வேலை பார்ககும் பெண்களில் பாதி பேர் தொழிலாளர் நலச்சட்டங்களால்
பாதுகாக்கப்படாத நிலையற்ற வேலைகளில் சிக்குண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
பெண்கள் சட்டத்தின் உதவியை நாடவும், குழந்தை நலம் பேணுவதற்காகன வசதிகளை அதிகரிக்கவும் அதிக அளவு பணம் ஒதுக்கீடு செய்யப் பட வேண்டும்
என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
பெண்கள் நீதித்துறை மற்றும் காவல் துறை போன்ற நீதி பரிபாலன அமைப்புகளை அணுகி தங்களுக்குரிய நீதியைப் பெறுவதில் பெரும் சிரமங்களை
எதிர்கொள்கிறார்கள் என்று ஐ.நா மன்ற பெண்கள் என்ற அமைப்பு அளித்திருக்கும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த அமைப்பு, தெற்காசியாவில் நிலைமை
இன்னும் மோசமாக இருக்கிறது என்றும், இங்கு நீதித்துறை மற்றும் காவல்
துறையில் பெண்கள் பிரதிநிதித்துவம்
போதிய அளவு இல்லாமல் இருப்பது பெண்கள் தமக்குரிய
நீதியைப் பெறுவதில் தடங்கலாக இருப்பதாகவும் கூறியிருக்கிறது.
No comments:
Post a Comment