Thursday 7 July 2011

நீலகிரி மாவட்டத்தில் உங்கள் நிலம் அபகரிப்புக்கு உள்ளானதா ?இதோ..புகார் செய்ய தொலைபேசி எண்கள்

உதகை : நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நில அபகரிப்பு மற்றும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பாக தகவல்களை திரட்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அப்பாவி பொதுமக்களிடமிருந்து நிலங்களை அபகரித்த நிலக்கொள்ளையர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நீலகிரி பொலிசார் தனி காவல் படை அமைத்து பொதுமக்களின் புகார்களை பெற்று வருகின்றனர்.


நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமாரின் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த தனிப்படை நீலகிரி மாவட்ட குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ஆர்.சக்கரவர்த்தி (94423 40959) தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

அவருடன் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் எஸ்.விஜயன் (99444 13131), சிறப்பு உதவி ஆய்வாளர் எம்.பாபுராவ் (94433 62671) மற்றும் 4 தலைமைக் காவலர்களும் இடம் பெற்றுள்ளனர்.  

எனவே, நீலகிரி மாவட்டத்தில் நில அபகரிப்பு செய்த நபர்கள் மற்றும் நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது  2223817 என்ற தொலைபேசி எண்  மூலமாகவோ அல்லது மேற்குறிப்பிட்ட அதிகாரிகளின் மொபைல் எண்களின் மூலமாகவோ பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவிக்கலாம் எனவும் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment