Thursday, 7 July 2011

கர்நாடக புதிய டி.ஜி.பி. நீலம் அச்சுதராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில புதிய டி.ஜி.பி.யாக நீலம் அச்சுதராவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) பொறுப்பு ஏற்கிறார்.

கர்நாடகத்தில் டி.ஜி.பி.யாக பணி செய்து வந்த அஜய்குமார் சிங் பதவி காலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, புதிய டி.ஜி.பி.யை தேர்ந்தெடுப்பதில் இழுபறி ஏற்பட்டது.

 

 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி குருபிரசாத் மற்றும் அப்போதைய பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் சங்கர் பிதரி ஆகியோர் இடையே ஏற்பட்ட போட்டியை தொடர்ந்து ரமேசை பொறுப்பு டி.ஜி.பி.யாக அரசு நியமித்தது.

இந்த நிலையில் புதிய டி.ஜி.பி.யை தேர்ந்தெடுக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்பென்ட், நீலம் அச்சுதராவ் உள்பட சிலர் பதவியை கைப்பற்ற போட்டி போட்டு வந்தனர். 30 வருடம் பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் டி.ஜி.பி. பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என்று சங்கர் பிதரி செய்த மனுவை கோர்ட்டு நிராகரித்தது.

இந்த நிலையில் நேற்று மாலை புதிய டி.ஜி.பி.யாக நீலம் அச்சுதராவை நியமித்து அரசு உத்தரவிட்டது. இவர் மாநில சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி.யாக பணி செய்து வந்தவர். பெங்களூர் நகர போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றி உள்ளார்.

புதிய போலீஸ் டி.ஜி.பி. நீலம் அச்சுதராவ் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளார்.

No comments:

Post a Comment