Thursday 7 July 2011

துருக்கியில் 4 துணைப்பிரதமர்கள் பதவியேற்பு

அங்காரா: துருக்கி நாட்டில் நான்கு துணைப்பிரதமர்கள் உள்பட புதிய கேபினட் அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். துருக்கி நாட்டின் 61-வது பொதுத்தேர்தல் கடந்த ஜூன் 12-ம் தேதி நடந்தது.




இதில் அதிபர் அப்துல்லா-கூல் என்பவரின் நீதி மற்றும் மேம்பாட்டு கட்சியின் சார்பில் தற்போது பிரதமராக உள்ள ரீசெப் தைப்பி ஈர்டோகன் என்பவரே இத்தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி பிரதமராக பார்லிமென்டில் பதவியேற்றார்.

இந்நிலையில் ஈர்டோகன் அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி நான்கு துணைப்பிரதமர்கள் நியமிக்கப்பட்டனர். அதிபர் அலி- அப்துல்லா-கூல் அளித்த பரிந்துரையின் இந்த நான்கு துணைப்பிரதமர்கள் மற்றும் அமைச்சரவை குழுவினர் நேற்று பதவியேற்றனர்.

பின்னர் , பிரதமர் ஈர்டோகன் பேசுகையில், 61-வது பார்லிமென்ட் தேர்தலில் மக்கள் எங்களுக்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளனர். அவர்களின் தேவை பூர்த்தி செய்ய பாடுபடுவோம் என்றார்.

No comments:

Post a Comment