கேரள மாணவி பலாத்கார வழக்கு: நாளை அடையாள அணிவகுப்பு- போலீஸ்
நாகர்கோவில்: கேரள மாணவி பலாத்கார வழக்கில் நாளை அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கேரள
மாணவி பலாத்கார வழக்கில் குமரி கான்டிராக்டர் மணிகண்டன், கேரள
மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி தாமஸ் வர்கீஸ், கோவை மின் வாரிய ஊழியர்
முருகேசன் மற்றும் புரோக்கர்கள் உள்பட சுமார் 53 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 65 பேர் கொண்ட பட்டியலை தனிப்படை போலீசார்
தயாரித்துள்ளனர்.
கைதாக வேண்டியவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச்
சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய குமரி
மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் தொடர்ந்து தலைமறைவாக
இருக்கிறார். அவரை மதுரை மற்றும் சுற்றுபுற மாவட்டங்களில் தனிப்படையினர்
தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மாணவி பலாத்கார வழக்கில்
குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக
ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக இதுவரை கைதானவர்களை வைத்து அடையாள அணிவகுப்பு
நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக பெரம்பூர் நீதிமன்றத்தில்
தனிப்படை போலீசார் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். நாளை அடையாள
அணிவகுப்பு நடைபெறலாம் என தெரிகிறது.
தன்னை பலாத்காரம்
செய்தவர்கள், அழைத்து சென்ற புரோக்கர்கள் என தனித்தனியாக மாணவி அடையாளம்
காட்ட உள்ளார். அதன் அடிப்படையில்தான் குற்றப்பத்திரிக்கை தயாரிக்க
உள்ளனர். தனிப்படை தேடி வரும் சிலரை மாணவி போட்டோ மூலம்
உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களும் குற்றப்பத்திரிகையில்
சேர்க்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment