Thursday, 7 July 2011

தமிழகத் திட்டங்களுக்கு ரூ. 23,535 கோடி ஒதுக்கீடு: மத்திய திட்டக் கமிஷன் அறிவிப்பு

டெல்லி: தமிழகத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடாக ரூ. 23,535 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவும், மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியாவும் நடத்திய பேச்சுவார்த்தையில் இது இறுதி செய்யப்பட்டுள்ளது.



 முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லி சென்று மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவுடன் பேச்சு நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார். நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பாராட்டு தெரிவித்த அலுவாலியா வளர்ச்சி விகிதத்தையும் பாராட்டினார். கூட்டத்தின் இறுதியில் அலுவாலியாவும்,ஜெயலலிதாவும் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அலுவாலியா கூறுகையில், தமிழக திட்டப் பணிகளுக்குரூ. 23,535 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முதல்வர் ஜெயலலிதா கோரிய நிதியை விட ரூ. 535 கோடி அதிகம். மேலும் கடந்த ஆண்டு திட்ட ஒதுக்கீட்டை விட ரூ. 3467 கோடி அதிகம் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்நது தமிழக அரசு கோரியதை விட கூடுதலாக நிதி ஒதுக்கிய திட்டக் கமிஷனுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment